
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற இருக்கும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இநிந்லையில் இத்தொடரில் அக்ஸர் படேல் தலைமையில் களமிறங்கியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி மார்ச் 30ஆம் தேதி தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இநிந்லையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கேஎல் ராகுல் தனது குழந்தை பிறப்பின் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார்.