Advertisement

ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலகல்?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் மெகா ஏலாம் நடைபெறவுள்ள நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
KL Rahul likely to part ways with Punjab Kings in IPL 2022
KL Rahul likely to part ways with Punjab Kings in IPL 2022 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2021 • 10:26 PM

பாஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரும், கேப்டனுமானவர் கேஎல் ராகுல். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இவரை 11 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2021 • 10:26 PM

அதன்பின் 2020ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 

Trending

இந்நிலையில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் 6ஆவது இடத்தைப் பிடித்தது. 

இதற்கிடையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், வருகிற டிசம்பர் மாதம் மெகா வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இதையடுத்து கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் கேஎல் ராகுலை அதிக தொகைக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கேஎல் ராகுல் 94 போட்டிகளில் விளையாடி 3273 ரன்களைக் குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்களும் 27 அரைசதங்களும் அடங்கும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement