தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கேஎல் ராகுல் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர் முதல் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அணியின் தலைமை பயிற்சியாளாராக செயல்படுகிறார். மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சலசலப்புகளையும் ஏற்படுத்தியது.
ஏனெனில் ருதுராஜ்க் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்காதது, சஞ்சு சாம்சனை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அதேசமயம் ஒருநாள் அணியை பொறுத்தவரையில் அறிமுக வீரர்கள் ரியான் பராக், ஷிவம் தூபே, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருடன் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய பிறகு அவர் விளையாடும் முதல் கிரிக்கெட் தொடர் இதுவாகும். அதேசமயம் கேஎல் ராகுலும் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதில் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இலங்கை சென்றுள்ளதுடன் தங்களது பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
— K L Rahul (@klrahul) July 24, 2024
அதேசமயம் இந்திய ஒருநாள் அணி விரைவில் இலங்கை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள கேஎல் ராகுல் இத்தொடருக்கு தயாராகும் வகையில் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் வலைபயிற்சியில் பந்துவீச்சாளர்களை விளாசித்தள்ளும் காணொளியையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து கேஎல் ராகுல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now