Advertisement

பயிற்சி ஆட்டம்: ஷமியின் கடைசி நேர யார்க்கர்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 17, 2022 • 13:06 PM
KL Rahul, Suryakumar, Mohammad Shami shine as India beat Australia by 6 runs in Brisbane
KL Rahul, Suryakumar, Mohammad Shami shine as India beat Australia by 6 runs in Brisbane (Image Source: Google)
Advertisement

உலககோப்பையின் உறுதிசெய்யப்படாத 4 இடத்திற்கான குரூப் ஸ்டேஜ் போட்டிகள் அக்டோபர் 16ஆம்  தேதி தொடங்கப்பட்டு அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர் சூப்பர் 12 எனப்படும் உலககோப்பையின் அரையிறுதி இடங்களுக்கான போட்டிகள் 12 அணிகளுக்கிடையே அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. மொத்தமாக 45 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

உலககோப்பை குரூப் ஸ்டேஜ் தகுதிசுற்று மற்றும் சூப்பர் 12 போட்டிகளுக்கு முன்பு 15 பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றன. குரூப் ஸ்டேஜ் அணிகளுக்குண்டான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்து உலககோப்பை போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Trending


இந்நிலையில் 9ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று காலை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா ஸ்டிரைக் மட்டும் ரொட்டேட் செய்ய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேஎல் ராகுல். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய கேஎல் ராகுல் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரோகித் சர்மாவும் வெளியேற, அடுத்து வந்த விராட் கோலி 1 பவுண்டரி, 1 சிக்சர் என நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அவரும் ஸ்டார்க் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் வெளியேற 5ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சூரியகுமார் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி இறுதியில் 186 ரன்கள் என்னும் நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது. 

கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி, 1 சிக்சர் என விளாசி அரைசதம் கடந்து 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் பவுலரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 18 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.  

அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களில் ஆட்டமிழக்க, ஆரோன் ஃபிஞ்ச் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 23 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 7 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இறுதியில் 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 79 ரன்களைச் சேர்த்திருந்த ஆரோன் ஃபிஞ்ச், ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது ஷமி பந்துவீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். 

அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் ரன்கள் சென்ற நிலையில் அடுத்த நான்கு பந்துகளில் விக்கெட்டுகள் வீழ்ந்து அது ஒரு அணியால் செய்யப்பட்ட ஹாட்ரிக் விக்கெட்டாகவும் பதிவானது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசிய முகமது ஷமி ஒரு ரன் அவுட் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement