Advertisement

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 11, 2022 • 22:18 PM
KL Rahul to captain India in Zimbabwe after being passed fitness test
KL Rahul to captain India in Zimbabwe after being passed fitness test (Image Source: Google)
Advertisement

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, தற்போது ஜிம்பாப்வேவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Trending


இதனால் ஷிகர் தவான் இந்த அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஆகிய இருவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக எடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

காயத்தால் ஐபிஎல்லில் இருந்தே விளையாடாத தீபக் சாஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்தனர். அதேசமயம் காயம் காரணமாக கேஎல் ராகுல் உடல் தகுதியை நிருபித்தால் அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது கேஎல் ராகுல் காயத்திலிருந்து மீண்டுள்ளதுடன், உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்ததுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஷிகர் தவான் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி: கேஎல் ராகுல் (கேப்டன்) ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement