
KL Rahul To Keep Wickets In Indians' Warm-Up Against County XI (Image Source: Google)
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இந்திய அணி, கவுண்டி அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ளது.
அதன்படி கவுண்டி லெவன் அணியுடனான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று டர்ஹாமில் நடைபெறுகிறது. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பர்கல் சஹா, ரிஷப் பந்த் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.