ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடவுள்ளார். இந்நிலையில் குழந்தை பிறப்பின் காரணமாக இத்தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராகுலும் அவரது மனைவி அதியா ஷெட்டியும் ஏப்ரல் மாதம் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Trending
இதுபோன்ற சூழ்நிலையில், அந்த நேரத்தில் ராகுல் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தங்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதியாவின் தந்தை நடிகர் சுனில் ஷெட்டி, சமீபத்தில் அளித்த பேட்டிய ஒன்றில் "ஏப்ரலில் எங்கள் பேரன் அல்லது பேத்தியை சந்திக்க காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேஎல் ராகுலை விடுவித்தது.
பின்னர் வீரர்கள் ஏலத்தின் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.14 கோடிக்கு கேஎல் ராகுல் ஒப்பந்தம் செய்யபட்டார். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன. ஏனெனில் அவர் இதற்கு முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் தான் ஒரு சாதாரண வீரராக மட்டுமே அணியில் விளையாடவுள்ளதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஜ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் அவர் சில போட்டிகளை தவறவிடுவார் என்ற தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சில ஐபிஎல் போட்டிகளில் ராகுல் வெளியேறுவது குறித்து கேஎல் ராகுலோ அல்லது அணியின் உரிமையாளரோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கேஎல் ராகுல் விளையாடுவாரா அல்லது போட்டிகளை தவறவிடுவாரா என்ற கேள்விக்கான விடை கூடிய விரையில் தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now