
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கேஎல் ராகுல் இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பை ஏற்பட்டு படுகாயமும் அடைந்தார். இதனால் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார் பேட்டிங் இறங்கவில்லை. வேறு வழி இன்றி 9 விக்கெட் இழந்த பிறகு உள்ளே வந்தார்.
அதற்கு அடுத்தடுத்த லீக் போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடவில்லை. லக்னோ அணிக்கு க்ருனால் பாண்டியா தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர். ஆகையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் விலகுகிறார் என்று அதிர்ச்சிகரமான அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டது. அடுத்த இரு தினங்களிலேயே மாற்றுவீரரும் அறிவிக்கப்பட்டுவிட்டது.