
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அறியபடுபவர் சுனில் சேத்ரி. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மோகன் பாகன் அணிக்காக களமிறங்கி தனது திறமையால் 2005ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்து தற்போதுவரை விளையாடி வருகிறார். மேலும் இந்திய அணிக்காக அதில கோல்களை அடித்துள்ள வீரர் எனும் சாதனையையும் சுனில் சேத்ரி படைத்துள்ளார். அதேசமயம் சர்வதேச கால்பந்து விளையாட்டில் அதிக கோல்களை அடித்த 4ஆவது வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் தற்சமயம் 39 வயதை எட்டியுள்ள சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் தானது சர்வதேச கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பாக தனது சமூக வலைதள பக்கங்களில் காணொளி வாயிலாக இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சுனில் சேத்ரி, “நாட்டுக்காக நான் முதல் முறையாக களம் கண்ட அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அப்போது எனக்குள் ஏற்பட்ட எண்ண ஓட்டங்களை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அந்த முதல் நாள் எனது பயணத்தில் சிறப்பான நாள். அறிமுக போட்டியில் கோல் பதிவு செய்திருந்தேன். இந்த 19 ஆண்டுகளில் நான் இத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளேன்.