
இங்கிலாந்து - இந்திய அணிக்களுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வாதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்கள் என 9230 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் விராட் கோலிக்கு பிசிசிஐ மற்றும் தேர்வு குழு வினரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “விராட் கோலி இந்த வடிவத்தில் தொடர விரும்பினார் என்று நினைக்கிறேன். பிசிசிஐயுடன் சில உள் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும், தேர்வாளர்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் அவரது ஃபார்மை மேற்கோள் காட்டி, அணியில் அவரது இடம் இனி இருக்காது என்று கூறியிருக்கலாம். என்ன நடந்தது என்பதை நாம் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது, திரைக்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்தது என்பதை யூகிப்பது மிகவும் கடினம்.