ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; அதிரடி வீரரை தட்டித்தூக்கிய கேகேஆர்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் ஜேசன் ராய்க்கு பதிலாக அதிரடி வீரர் பிலிப் சால்ட்டை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்ட வருகிறது. அதன்படி வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதேசமயம் இத்தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.
Trending
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜேசன் ராய் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக மற்றொரு இங்கிலாந்து அதிரடி வீரர் பிலீப் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய பிலிப் சால்ட், சரிவர சோபிக்க தவறியதால் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்திலும் அவரை எந்த அணியும் ஏலம் கேட்க முன்வரவில்லை. அதிலும் குறிப்பாக, அவர் ஏலத்தில் எடுக்கப்படாத சில தினங்களுக்கு முன்புதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Phil Salt Joins KKR Ahead Of IPL 2024!#IPL2024 #KKR #PhilSalt #JasonRoy pic.twitter.com/mdcaXFWyXJ
— CRICKETNMORE (@cricketnmore) March 10, 2024
இந்நிலையில் பிலிப் சால்ட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் அந்த அணியின் பேட்டிங் துறையானது மேலும் வலிமையடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பிலிப் சால்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன், 639 ரன்களையும், ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்களுடன் 218 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now