IND A vs AUS A 1st Test: இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியின் தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் சதம் விளாசி அசத்தியதுடன், 109 ரன்களைச் சேர்த்தார்.
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று லக்னோவில் தொட்ங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் கேம்பல் கெல்லவே இணை அடியான தொடக்கத்தை வழங்கினர்.
இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட சாம் கொன்ஸ்டாஸ் சதமடித்து அசத்த, மறுபக்கம் கேம்பல் தனது பங்கிற்கு அரைசதம் விளாசினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 198 ரன்கள் சேர்த்த நிலையில், காம்பெல் கெல்லவே 88 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனீ, ஆலிவர் பீக் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஆவர்களைத் தொடர்ந்து 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்திருந்த சாம் கொன்ஸ்டாஸும் தனது விக்கெட்டை இழந்தார்.