
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு பின் இந்திய அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வரும் நிலையில், ஒரே நல்ல விசயமாக ஹர்திக் பாண்டியாக்கு ஏற்ற சரியான ஆல் ரவுண்டரை கண்டுபிடித்துள்ளது தான். அதன்படி இத்தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமான நிதிஷ் ரெட்டி பேட்டிங் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். அதிலும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினார்.
இதுதவிர்த்து பந்துவீச்சிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டர் இடத்தை நிதிஷ் ரெட்டி தக்கவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியிலும் நிதீஷ் ரெட்டி இடம்பிடித்துள்ள நிலையில், இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.