
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஒரு பக்கம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பரபரப்பாக தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாம் நிலை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதற்காக சீனா சென்று உள்ளது.
இந்த அணிக்கு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்களைக் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியில் சிறந்த ஒரு அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடரில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி நாளை தன்னுடைய போட்டியில் விளையாடுகிறது. வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதியில் ஆறாம் தேதியும், இறுதிப் போட்டியில் ஏழாம் தேதியும் விளையாடும்.
இந்த நிலையில் இந்த தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட் “நான் தோனி இடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அவருடைய பாணி வித்தியாசமானது. அவருடைய ஆளுமை வித்தியாசமானது. நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன். அவர் வழக்கமாக என்ன செய்வார்? என்பதை உண்மையில் பார்க்க மாட்டேன்.