
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ். இவர் தனது ஆல்டைம் சிறந்த டி20 லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அவது டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமல்லாது, ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக் என உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் ஆடி 1000 சிக்ஸர்களுக்கு மேல் விளாசியுள்ளார்.
ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000க்கும் அதிகமான ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் விளாசியுள்ள ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர்.