
இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி முதல் சுற்று உடன் தோற்று வெளியேற இருக்கிறது. உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இங்கிலாந்து உலகக்கோப்பை அணி வெளியிட்ட பொழுது, அந்த அணியை பார்த்து மற்ற கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பயந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது.
மேலும் சமீபக்காலத்தில் இங்கிலாந்து ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் அசுரத்தனமாக பேட்டிங் செய்து வந்தது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 500 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் எடுக்கும் அணியாக இங்கிலாந்து இருக்கும் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் நம்பும் அளவிற்கு அவர்கள் அதிரடியாக விளையாடினார்கள்.
இதே எதிர்பார்ப்போடுதான் அவர்கள் இந்தியாவில் உலககோப்பைத் தொடர் விளையாடுவதற்காக வந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து எதுவுமே இதுவரை சரியாக நடைபெறவில்லை. அவர்கள் தோல்வி அடையும் விதம் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தை பெரிதும் கவலை அடைய செய்திருக்கிறது.