Advertisement

எல்எல்சி 2022: தரங்கா, மிஷ்பா அதிரடி; இந்தியா மகாராஜாஸுக்கு 176 ரன்கள் இலக்கு!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா மஹாராஜஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
LLC 2022: Asia lions finishes off 175/6 against India Maharajas
LLC 2022: Asia lions finishes off 175/6 against India Maharajas (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 20, 2022 • 10:02 PM

முன்னாள் ஜாம்பவான்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலாம தொடங்கியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 20, 2022 • 10:02 PM

இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா மஹாராஜா - ஆசியா லையன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மஹாராஜா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Trending

அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் தில்சன் 5 ரன்களிலும், காம்ரன் அக்மல் 25 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய உப்புல் தரங்கா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 66 ரன்கள் சேர்த்திருந்த தரங்கா முனாஃப் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய முகமது ஹபீஸ், முகமது யூசூப் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற, கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிரடியாக விளையாடி 44 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆசிய லையன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இந்தியா மகாராஜா அணி தரப்பில் மன்ப்ரீட் கோனி 3 விக்கெட்டுகளையும், இர்ஃபான் பதான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement