Advertisement

எல்எல்சி 2023: ஃபிஞ்ச், வாட்சன் அரைசதம்; உலக ஜெயண்ட்ஸ் 166 ரன்கள் குவிப்பு!

இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
LLC 2023: Finch, Watson fiftys guides Wolrd Giants post a total of 166!
LLC 2023: Finch, Watson fiftys guides Wolrd Giants post a total of 166! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 11, 2023 • 09:49 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரிலுள்ள தோஹாவில் நேற்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகாராஜாஸை வீழ்த்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 11, 2023 • 09:49 PM

இந்நிலையில் இன்று நடைபெற்று வர்ம் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, உலக ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 5 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Trending

பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - ஷேன் வாட்சன் இணை அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஃபிஞ்ச் 25 பந்துகளில் தனது அரைசத்தைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து 108 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர். 

அதன்பின் 53 ரன்களில் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, மறுமுனையில் 55 ரன்களைச் சேர்த்திருந்த ஷேன் வாட்சனும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜாக்ஸ் காலிஸ், ராஸ் டெய்லர், கெவின் ஓ பிரையன், மோர்னே வேன்வைக் என அனைவரும் ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. மகாராஜாஸ் தரப்பில் அபாரமாக பந்துவீச்சிய ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement