Advertisement
Advertisement
Advertisement

எல்எல்சி 2023: உத்தப்பா, கம்பீர் அதிரடியில் இந்திய மகாராஜாஸ் அபார வெற்றி!

ஆசிய லையன்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்திய மகாராஜாஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan March 15, 2023 • 09:37 AM
LLC 2023: India Maharajas thrashed Asia Lions with ten wickets in hand!
LLC 2023: India Maharajas thrashed Asia Lions with ten wickets in hand! (Image Source: Google)
Advertisement

லெஜெண்ட் லீக் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஓய்வு பெற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் - இந்திய மகாராஜாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய மகாராஜாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி முதலில் விளையாடிய ஆசியா லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர்கள் உப்பல் தரங்கா மற்றும் திலகரத்தினே தில்ஷான் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். சிறப்பாக ஆடிய தரங்கா 48 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

Trending


இவருக்கு துணையாக விளையாடிய தில்ஷன் முப்பத்தி இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய அப்துல் ரசாக் 17 பந்துகளில் 27 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இந்திய மகாராஜா அணியின் பந்துவீச்சில் சுரேஷ் ரெய்னா இரண்டு விக்கெட்களையும் பிரவீன் தாம்பே ஹர்பஜன்சிங் மற்றும் ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகாராஜா அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 12.3 ஓவர்களில் 158 ரன்களை விக்கெட் இழப்பின்றி செஸ் செய்து வெற்றி பெற்றனர்.

இதில் அதிரடியாக ஆடிய உத்தப்பா 39 பந்துகளில் 88 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். இவருக்கு உறுதுணையாக ஆடிய கௌதம் கம்பீர் 36 பந்துகளில் 61 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய மகாராஜா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ராபின் உத்தப்பா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement