
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் தோயம் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மணிப்பால் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மஸ்டர்ட் 6 ரன்களிலும், மனோஜ் திவாரி 9 ரன்களிலும், பினார் 11 ரன்களிலும், சௌரவ் திவாரி 8 ரன்களிலும், ஏஞ்சலோ பெரேரா 18 ரன்களிலும், குணரத்னே 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். இதனால் மணிப்பால் டைக்ர்ஸ் அணியானது 82 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அப்போது களமிறங்கிய திசாரா பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
தொடர்ந்து அபாரமான ஆட்டாத்தை வெளிப்படுத்திய திசாரா பெரேரா 27 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மணிப்பால் டைகர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்து. ஹைதராபாத் அணி தரப்பில் பிபுல் சர்மா மற்றும் குர்கீரத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கும் தொடக்கமானது சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் சாத்விக் வால்டன், ஜார்ஜ் வொர்க்கர் தலா 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.