
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் இந்திய அணி குறைந்தபட்சம் 5 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் டிராவிட் , டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "வங்கதேசம் போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டி விளையாடுவது மூலம் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து விளக்கம் அளித்துள்ள டிராவிட், நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை. முதலில் சட்டோகிராம் டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டும்.
அதன் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாடுகிறோம் என்று பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளும் கடும் சவாலாக இருக்கும். இதில் வெற்றி பெற்றால் தான் இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். எனவே ஒவ்வொரு போட்டியாக தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருவது நல்ல விஷயம் தான்.