விராட் கோலி அணியை வழிநடத்துவதை விடுத்து பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டு - டபிள்யூ.வி.ராமன்
விராட் கோலி ஒரு தலைவராக முன்னின்று வழிநடத்துவதை விடுத்து பின்னாலிலிருந்து அனைவரையும் இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் வைத்துள்ளன.
மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவர் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Trending
இந்நிலையில்,விராட் கோலி ஒரு தலைவராக முன்னின்று வழிநடத்துவதை விடுத்து பின்னாலிலிருந்து அனைவரையும் இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ராமன், “நாம் உண்மையில் விராட் கோலியை தவறு கூற முடியாது. வாழ்க்கையில் பொதுவாக நாம் நினைக்கும் சில நடைமுறைகள் கிரிக்கெட்டில் செய்துகாட்ட முடியாது. அதாவது விராட் மீது நிறைய அழுத்தம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அதில் மேல் அதிக கவனம் குவிகிறது. அவர் சிறந்த வீரர் அதனால் நாம் அவரிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்.
சச்சின் டெண்டுல்கர் மீது இப்படிப்பட்ட அழுத்தம் இருந்தது, அதனால் 95 ரன்கள் எடுத்தாலும் அதுவே ஒரு குறைவான இன்னிங்ஸ் என்ற எண்ணமே ரசிகர்களுக்கு ஏற்படும். நான் விராட் கோலியின் பயிற்சியாளராக இருந்தேன் என்றால், ‘விராட் முன்னால் நின்று அணியை வழிநடத்தியது போதும், மற்றவர்களை பின்னாலிலிருந்து இயக்குங்கள், இப்படி செய்தால் நீங்கள் உங்கள் பார்மை மீண்டும் பெற்று விடுவீர்கள்’ என்று கூறுவேன்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ஹெட்டிங்லே டெஸ்டின் 2வது இன்னிங்சில் வீராட் கோலி மீண்டும் தனது பழைய ஃபார்முடன் விளையாடினார். அதனால் நிச்சயம் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாகவே விளையாடுவார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now