
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான கில். இவர் இந்திய டெஸ்ட் அணியின் வருங்காலமாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவிற்கு அவ்வப்போது ஓய்வு அளிக்கப்படும்போது ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதுவரை 14 இன்னிங்சில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் விளாசியுள்ளார். சராசரி 60-க்கு மேல் ஆகும்.
நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். நேற்று நடைபெற்ற 2ஆவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 45 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு மூன்று முறை மழையால் போட்டி நிறுத்தப்பட்டு இறுதியாக கைவிடப்பட்டது. இப்படி நடப்பதால் வீரர்கள் ஏமாற்றம் அடைவதுடன் எரிச்சலும் அடைவார்கள். ரசிகர்களும் அதேபோல்தான்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்த அணியில் இடம் பிடிப்பதற்கு அச்சாரம் போட்டிவிடலாம் என நினைத்திருந்தார். போட்டி ரத்தான பிறகு, எதிர்காலம் மற்றும் மழை பெய்தால் போட்டியை நடத்த மாற்று ஏற்பாடு குறித்து பேட்டியளித்தார்.