
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அசத்திய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதுடன், ஆட்டநாயகி விருதையும் வென்றார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல் இப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மேற்கொண்டு முதல் ஒருநாள் ஆட்டத்தில் சோபிக்க தவறவிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனை லாரா வோல்வார்ட் இரண்டு இடங்கள் பின் தங்கி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.