
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டராக அறியப்பட்டவர் மேத்யூ வேட். தற்போது 36 வயதாகும், இவர் ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ளார்.
அந்தவகையில் 36 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள், 5 அரைசதங்கள் என 1613 ரன்களையும், 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 11 அரைசதங்கள் என 1867 ரன்களையும், 92 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 1202 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டைன்ஸ் அணி மொத்தமாக 15 போட்டிகளில் மட்டுமெ விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தாக்கது.
அதேசமயம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் அந்த அணியிலும் மேத்யூ வேட் இடம்பிடித்திருந்தார். அதுமட்டுமின்றி அத்தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் மேத்யூ வேட் பேட்டிங்கில் மிக முக்கிய பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.