
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கிய இத்தொடரில் இதுவரை 27 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட அணிகள் புள்ளிப்பட்டியளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதனால் பெரும்பாலும் இந்த நான்கு அணிகளே அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தொடரின் அரையிறுதிப்போட்டிகள் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளிலும், இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கெதிராக விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு அனுபவ வீரரான மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.