
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று தொடங்கியது. அதன்படி குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் மெஹிதி ஹசன் மிராஸ், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணியானது 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 35 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 27 ரன்களையும் சேர்த்தனர் இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைபற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமர் யாதவும் 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.