
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர். எனினும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான இருதரப்பு போட்டிகள் 2007 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டது. இதனால், இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.
கடைசியாக இந்த இரு அணிகளும் சந்தித்தது அக்டோபரில் நடந்த டி20 உலகக் கோப்பையில் போட்டியில் தான். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. மேலும், இப்போட்டியை பார்க்க மெல்போர்ன் மைதானத்தில் 90,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக அதன் தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ் கூறுகையில், “இரு அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கான இடத்தை நிரப்புவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று டி20 உலகக் கோப்பை போட்டியின் சூழ்நிலை காட்டுகிறது.