
வங்கதேசத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்து, அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றி தக்க பதிலடி கொடுத்து. அதனால் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் காலத்திற்கும் இந்திய அணியினரும் ரசிகர்களும் மறக்க முடியாத அளவுக்கு வங்கதேச வீரர் மெஹதி ஹசன் தொடர்ச்சியான பயத்தை காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக தாக்கா கிரிக்கெட் மைதானம் அவருடைய கோட்டையாக திகழ்ந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் தாக்கா மைதானத்தில் நடைபெற்றது.
அதில் முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா நிர்ணயித்தை வெறும் 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது 8ஆவது இடத்தில் களமிறங்கி கேஎல் ராகுல் தவற விட்ட கேட்ச்சை பயன்படுத்திய மெஹதி ஹசன் 38 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்து வங்கதேசத்திற்கு 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று கொடுத்தார்.