
Mehidy Hasan & Mustafizur Rahman SCRIPT India’s DOWNFALL in Dhaka with RECORD 10th-wicket Partnershi (Image Source: Google)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் 7 மற்றும் ரோஹித் சர்மா 27 ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 24, வாஷிங்டன் சுந்தர் 19, ஷபாஸ் அகமது 0, ஷர்துல் தாகூர் 2, தீபக் சாஹர் 0 ஆகியோர் ஒருமுனையில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 73 ரன்களுக்கு 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.