
ஐசிசி தொடர்கள் என்று எடுத்துக்கொண்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கக்கூடிய அணி நியூசிலாந்து. வரலாறு அப்படியானதாகத்தான் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் என்று இல்லாமல் மற்ற இரண்டு கிரிக்கெட் வடிவங்களிலும் ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை பல நீண்ட காலமாக நியூசிலாந்து அணி கொடுத்து வருகிறது.
2019 ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை பெற்றிருந்த இந்திய அணி, அந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் அபார வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக வந்தது. அப்படிப்பட்ட அணியை லீக் சுற்றில் தட்டுத் தடுமாறி அரை இறுதி வந்த நியூசிலாந்து வீழ்த்தியது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் லீக் சுற்றில் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது.
முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தியது. இதுவரை 13 ஐசிசி தொடர்களில் நேருக்கு நேராக சந்தித்து பத்து முறை இந்திய அணியை வென்று இருக்கிறது. இந்த நிலையில் இன்று நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. மேலும் இரண்டு அணிகளும் இதுவரை தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோற்காமல் இருக்கின்றன.