Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ஹோல்டர்; மாற்று வீரரை அறிவித்தது விண்டீஸ்!

வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Advertisement
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ஹோல்டர்; மாற்று வீரரை அறிவித்தது விண்டீஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ஹோல்டர்; மாற்று வீரரை அறிவித்தது விண்டீஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2024 • 10:03 PM

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2024 • 10:03 PM

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பாவெல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன், பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், ரொமாரியோ செஃபெர்ட், அகீல் ஹொசைன் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Trending

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஷமார் ஜோசபிற்கு இந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதேசமயம் கைல் மேயர்ஸ், ஒஷேன் தாமஸ் போன்ற வீரர்களுக்கு இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்கவில்லை .

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ராவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் ஒபேத் மெக்காய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஒபேத் மெக்காய், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement