டி20 உலகக்கோப்பை 2024: ரிசர்வ் டே அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் டே அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி குரூப் எ ,குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 05ஆம் தேதி விளையாடவுள்ளது.
Trending
தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. மேலும் இத்தொடரின் அரையிறுதிப்போட்டிகள் ஜூன் 26 மற்றும் 27ஆம் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக ஐசிசி அட்டவணையைத் தயாரித்திருந்தது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் டேவுக்கு ஆட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதலாவது அரையிறுதி போட்டிக்கான ரிசர்வ் டேவாக ஜூன் 27ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப்போட்டிக்கான ரிசர்வ் டேவாக ஜூன் 28ஆம் தேதியையும் ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ரிசர்வ் டேவாக ஜூன் 30ஆம் தேதியை ஐசிசி அறிவித்துள்ளது. அதுபோக, குரூப் ஸ்டேஜ்கள் மற்றும் சூப்பர் எட்டு கட்டங்களில் ஒரு ஆட்டத்தின் முடிவை கணிக்க, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு குறைந்தபட்சம் ஐந்து ஓவர்கள் வீச வேண்டும் என்று ஐசிசி நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும் என்று ஐசிசி கூறியுள்ளது. இதன்மூலம் அட்டத்தின் முடிவை எட்ட அணிகள் குறைந்தது இரண்டாவது இன்னிங்ஸில் 5 முதல் 10 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now