விராட் கோலியைப் பார்த்து இங்கிலாந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மைக்கேல் வாகன்!
விராட் கோலி முதலில் களத்தில் நான்கு மணி நேரம் ஓடி ஓடி விளையாடுகிறார். பின்பு அவர் பேட்டிங் செய்ய வந்து மூன்று மணி நேரம் காலத்தில் தொடர்ந்து ஓடி ஓடி ரன்கள் எடுத்து இலக்கை துரத்தி அணியை வெல்ல வைக்கிறார் என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக முதல் சுற்றோடு தோற்று இங்கிலாந்து அணி வெளியேறிவிடும் என்று யாராவது கூறி இருந்தால், உலகத்தில் எந்த கிரிக்கெட் ரசிகரும் அதை நம்பி இருக்க மாட்டார். காரணம் அதிகப்படியான ஆல்ரவுண்டர்களைக் கொண்டு, நீளமான பேட்டிங் வரிசையுடன், முதல் பந்தில் இருந்து கடைசிப் பந்து வரை அதிரடியாக விளையாடும் போக்கை கொண்டிருந்த இங்கிலாந்து, எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் அச்சுறுத்தும் ஒரு அமைப்பாகத்தான் இந்த உலகக் கோப்பை தொடருக்குள் வந்தது.
மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களிலும் அவர்களே உலக சாம்பியனாக இருக்கின்ற காரணத்தினாலும், அவர்களது ஆட்ட அணுகு முறையாலும், இந்த முறை உலகக் கோப்பைத் தொடர் இறுதிப் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் இருப்பார்கள் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் இங்கிலாந்து தோற்று வெளியேறியது மட்டும் இல்லாமல், ஆப்கானிஸ்தான் இலங்கை என்று எதிர்பாராத எல்லா அணிகளிடமும் மோசமாக அடி வாங்கியது.
Trending
மேலும் அவர்கள் இறுதியாக தட்டு தடுமாறித்தான் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றார்கள். நாடு திரும்பி உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிகள் இடம்பெற்ற 9 வீரர்கள் அதில் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் கேப்டன் மற்றும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செல்லவில்லை.
இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் விராட் கோலியை வைத்து இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு அறிவுரை கூறும் பொழுது, “டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் விளையாடுவதற்கு நிதானமான கவலையற்ற மனநிலை மிகவும் சரியாக இருந்தது. ஆனால் இதுவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தொடரக்கூடாது. நீங்கள் இங்கு சிறப்பாக செயல்பட உங்கள் உடல் தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். விராட் கோலி முதலில் களத்தில் நான்கு மணி நேரம் ஓடி ஓடி விளையாடுகிறார்.
பின்பு அவர் பேட்டிங் செய்ய வந்து மூன்று மணி நேரம் காலத்தில் தொடர்ந்து ஓடி ஓடி ரன்கள் எடுத்து இலக்கை துரத்தி அணியை வெல்ல வைக்கிறார். இதுதான் அவர் செய்யும் உடற்பயிற்சிக்கான வெளிப்பாடு. ஆங்கில கிரிக்கெட் என்பது உடல்தகுதி விஷயத்தில் ஒழுக்கத்திற்கான கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும். நீங்கள் உங்கள் உடல் தகுதிக்காக ஜிம்மில் கடுமையாக உழைக்க வேண்டும். கிரிக்கெட் ஓடி ஆடும் விளையாட்டு என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டின் திறக்கும் பின்னால் இருக்கும் குழு இதை செய்யும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now