அவர்கள் மூவரையும் எதிர்கொள்வது எளிதல்ல -இங்கிலாந்தை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்!
அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் கண்டிப்பாக தெறிக்க விடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடலாம் என்று கனவு காண வேண்டும் என இங்கிலாந்தை மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.
ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் தங்களுடைய லீக் சுற்றில் முதலாவதாக தென் ஆபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளும் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து தங்களுடைய சொந்த மண்ணில் வரும் ஜனவரி மாத இறுதியில் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றது முதலே டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவை தங்களுடைய சொந்த மண்ணில் ரத்து செய்யப்பட்ட 5ஆவது போட்டியில் தோற்கடித்த இங்கிலாந்து பின்னர் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் தோற்கடித்து 2023 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்தது.
Trending
அந்த வரிசையில் தற்போது இந்தியாவையும் அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியும் என்று இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்து மிகப்பெரிய சவால் கொடுத்ததாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு ஸ்பின்னர் சுழலுக்கு சாதகமற்ற மைதானங்களில் பெரிய சவாலை கொடுத்த நிலையில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் கண்டிப்பாக தெறிக்க விடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடலாம் என்று கனவு காண வேண்டும் என இங்கிலாந்தை மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலகிலேயே விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம் இந்தியா. கடந்த ஆஷஸ் தொடரை நீங்கள் திரும்பிப் பார்த்தால் நாதன் லையன் சிறப்பாக பந்து வீசியதால் ஆஸ்திரேலியா 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக எட்ஜ்பஸ்டன் நகரில் பரவலாக ஃபீல்டிங் நிறுத்தப்பட்ட போது அந்த ஒரு ஸ்பின்னர் இங்கிலாந்தினரின் சுமாரான ஷாட்டுகளால் 5 விக்கெட்களை எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.
அதே சூழ்நிலையில் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் எதிர்கொள்ளும் போது இங்கிலாந்து அணியினர் தெறிக்க விடப்படலாம். சமீபத்தில் இந்தியாவில் நாங்கள் அதிரடியாக விளையாடுவோம் என்று அவர்கள் பேசினார்கள். எனவே இத்தொடரை பார்ப்பது சிறப்பாக இருக்கும். ஆனால் நேதன் லயனுக்கு எதிராக சொந்த மண்ணில் தடுமாறிய இங்கிலாந்து அணியினர் 3 தரமான ஸ்பின்னர்களை இந்தியாவை எதிர்கொள்வதால் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now