பென் ஸ்டோக்ஸை விளையாட வைக்க கூடாது - மைக்கேல் வாகன்!
மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இந்த விளையாட்டு வடிவத்திற்கு சரியானவர்களாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் வெற்றிகரமான வீரர்களில் தாக்கம் நிறைந்தவர் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ். தற்பொழுது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துக் கொண்டு வந்தது.
இந்தியா வந்த அவரால் ஆரம்ப சில போட்டிகளை காயம் காரணமாக விளையாட முடியவில்லை. அதற்குள் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி வரை தோல்வியடைந்திருந்தது. பிறகு அவர் காயம் சரியாக விளையாட வந்து உடனே இலங்கை அணி இடம் தோல்வி அடைந்தது. நேற்று இந்திய அணி இடமும் தோல்வியடைந்தது.
Trending
பென் ஸ்டோக்ஸ் காயம் சரியாகி விளையாட வந்தாலும் அவரால் தாக்கம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இங்கிலாந்து அணியின் நடப்பு உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மீது இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மெல்ல மெல்ல குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடுவது குறித்து பேசிய மைக்கேல் வாகன், “பென் ஸ்டோக்ஸை விளையாட வைக்க கூடாது. நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டும். அடுத்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அவர் இங்கிலாந்து அணியில் ஒரு அங்கமாக இருக்கப் போவதில்லை. இதை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் உணர்ந்தால் அவர் விளையாடக் கூடாது.
அவருடைய இடத்தில் எதிர்கால வீரரான ஹாரி ப்ரூக் உள்ளே வந்து விளையாட வேண்டும். இது உயர்தர விளையாட்டுப் போட்டிகள் எவ்வளவு இரக்கமற்றது என்பதற்கான பேச்சு. மாறாக வீரர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை பற்றி கிடையாது. தற்பொழுது இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியை ரீசெட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இந்த விளையாட்டு வடிவத்திற்கு சரியானவர்களாக இல்லை. ஹாரி ப்ரூக், பிரைடல் கார்சன் மற்றும் அட்கிஸ்டன் இந்த மூன்று பேருடன் அடுத்த மூன்று போட்டிகளை இங்கிலாந்து அணி விளையாட வேண்டும். அவர்கள் அட்கிஸ்டனை ஏன் விளையாட வைக்கவில்லை என்பது எனக்கு இப்பொழுதும் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now