பாபர் ஆசாம் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் - மிஸ்பா உல் ஹக்!
இந்தியாவின் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு பாபர் அசாமை முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிஎஸ்எல் தொடரின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. அத்தொடரில் பிப்ரவரி 23ஆம் தேதியன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 75 (58) ரன்கள் எடுத்த நிலையில் அதை சேசிங் செய்த இஸ்லாமாபாத் 14.5 ஓவரிலேயே அதிரடியாக செயல்பட்டு 159/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பாபர் அசாமை தவிர்த்து எஞ்சிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் அடித்து நொறுக்க வேண்டிய தொடக்க வீரராக களமிறங்கி நன்கு செட்டிலாகி 58 பந்துகள் அதாவது கிட்டத்தட்ட 10 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று பிட்ச் மற்றும் எதிரணியின் பவுலங்கை பற்றி நன்கு தெரிந்தும் கடைசி வரை அதிரடியாக விளையாடாத பாபர் அசாம் கடைசி வரை அவுட்டாகாமல் சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாகவே இதே போல தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடாமல் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் பெரிய ரன்களை குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கும் அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
Trending
அதனால் கேப்டனாக அணியின் நலனுக்காக உங்களது ஓப்பனிங் இடத்தை இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு மிடில் ஆர்டரில் விளையாடுமாறு வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் விடுத்த ஆலோசனையை மதிக்காத அவர் தொடர்ந்து இப்படி சுயநலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பொல்லார்ட் போல அதிரடியாக விளையாடும் திறமை இல்லாத நீங்கள் எப்படி பீல்டர்களின் இடைவெளியை கண்டறிந்து கடைசி நேரங்களில் 15 – 20 அடிக்கலாம் என்ற யுக்தியை இந்தியாவின் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு பாபர் அசாமை முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அப்போட்டியில் பாபர் சிறப்பாக விளையாடினார். அந்த சூழ்நிலையில் மிடில் ஓவர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதில் அவர் முன்னேற வேண்டும். குறிப்பாக விராட் கோலி அல்லது முகமது ரிஸ்வான் ஆகியோர் கடைசி 2 ஓவரில் எடுத்த ரன்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நீங்கள் எப்படி பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம் என்பதில் உங்களுக்கான சொந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
சூழ்நிலைக்கேற்றால் போல் நீங்கள் மாற வேண்டும். உலகத்தரம் வாய்ந்த வீரரான உங்களால் அதை செய்ய முடியும். மேலும் கைரன் பொல்லார்ட் போல உங்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை என்றாலும் உங்களது பலத்திற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். எடுத்துக்காட்டாக விராட் கோலி அதிரடியாக அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரர் கிடையாது. ஆனால் அவரால் கடைசி ஓவரில் 15 – 20 ரன்களை எளிதாக சேசிங் செய்ய முடியும்.
அதற்குக் காரணம் அவர் எப்போதும் வடிவத்தை மெயின்டன் செய்து டைமிங்கில் கவனம் செலுத்துகிறார். அவர் எப்போதும் களத்தில் இருக்கும் காலியான இடங்களை குறி வைத்து அடிக்கிறார். சூரியகுமார் யாதவும் அதே போன்ற செயல்பாடுகளை தான் வெளிப்படுத்துகிறார். எனவே அந்த யுக்தியை பாபர் அசாம் தனது பேட்டிங்கில் சேர்த்துக்கொண்டால் டி20 கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான வீரராக செயல்பட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now