பிபிஎல் 2024-25: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த மார்ஷ் - வைரலாகும் காணொளி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் அணியில் விளையாடிய மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் ஆரோன் ஹார்டி 34 ரன்களையும், ஆஷ்டன் அகர் 51 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், டாம் ரோஜர்ஸ், வில் சதர்லெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர் ரெனிகேட்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக, அந்த அணி 44 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் வில் சதர்லெட் - தாமஸ் ரோஜர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில் சதர்லெட் அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் தாமஸ் ரோஜர்ஸ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
GOLDEN DUCK
Mitch Marsh in his return to the BBL goes after just one delivery from Will Sutherland! #BBL14 pic.twitter.com/s5JVi9fipH— KFC Big Bash League (@BBL) January 7, 2025இந்நிலையில் இப்போட்டிக்கான பெர்த் அணியில் இடம்பிடித்து நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். அதன்படி வில் சதர்லேண்ட் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் அதில் எல்பிடபிள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதேசமயம் சமீப காலங்களில் மிட்செல் மார்ஷின் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த மிட்செல் மார்ஷ் இத்தொடரின் முதல் நான்கு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பிடித்திருந்தார். இருப்பினும் அவர் தொடர்ச்சியாக சோபிக்க தவறியதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now