
MLC 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையரின் அபாரமான ஆட்டத்தின் மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணி நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணியில் குயின்டன் டி காக் ஒரு ரன்னிலும், மொனாங்க் படேல் 20 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - தஜிந்தர் தில்லான் இணை அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து மூன்ராவது விக்கெட்டிற்கு 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தத நிலையில், தில்லன் 8 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் சதமடித்து அசத்தியதுடன் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 108 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. ஆர்காஸ் தரப்பில் கைல் மேயர்ஸ், ஜெரால்ட் கோட்ஸி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.