NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் முகமது ஹாரிஸ் திவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Trending
அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார். இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். இதில் அந்த அணியின் இளம் வீரர் முகமது ஹாரிஸ் பயிற்சியில் சிறந்த ஃபார்மில் காணப்பட்டார்.
அவர் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் சிக்ஸகளை பறக்கவிட்டு சத்தினார். அதன்படி ஷாஹீன், முகமது ஹாரிஸை வேகமான ஷார்ட் பந்தில் சோதிக்க முயன்றார். இருப்பினும், அதற்குத் தயாராக இருந்த ஹாரிஸ் புல் ஷாட் மூலம் சிக்ஸரை விளாசினார். இந்நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
Muhammad Haris hits a six on the roof against Shaheen Afridi.pic.twitter.com/bbFSF7lb6I
— (@CallMeSheri1) March 10, 2025பாகிஸ்தான் டி20 அணி: ஹசன் நவாஸ், உமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், சல்மான் அலி ஆகா (கேப்டன்), இர்ஃபான் நியாசி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், முகமது அலி, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.
Win Big, Make Your Cricket Tales Now