
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் ஷிகர் தவான் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறி, சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் கிரேட்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 2 விக்கெட்டுகளையும், ஹமித், ரஸாக், பவன் நெகி மற்றும் ஜெசல் கரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ஹாமில்டன் மஸகட்சா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மஸகட்ஸா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.