CT2025: இந்திய அணியை தேர்வு செய்த முகமது கைஃப்; பும்ரா, பந்த்துக்கு இடமில்லை!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனக்குப் பிடித்த இந்திய அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனைய்டுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டும் என்பது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இவர்களில் யாருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.
Trending
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனக்குப் பிடித்த இந்திய அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தனது அணியில் 15 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார், அதில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதனை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் காணொளி வாயிலாக பகிர்ந்துள்ளார்.
அவர் தேர்ர்வு செய்துள்ள இந்த அணியில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ராவை தேர்ந்தெடுக்கவில்லை. இது தவிர, அவர் நேரடியாக தனது அணியில் முதல் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலைத் தேர்ந்தெடுத்தார், பின்னர் 15 பேரில் மற்றொரு மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இவரது அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பந்திற்கு அவர் தனது அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Aapka #ChampionsTrophy ki 15 batao comments mein!#CricketWithKaif11 #TeamIndia pic.twitter.com/gPHHdX3Dv1
— Mohammad Kaif (@MohammadKaif) January 18, 2025
முகமது கைஃப் தனக்குப் பிடித்த அணியில் சில இளம் வீரர்களையும் சேர்த்துள்ளார், அதில் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களின் பெயர்களும் அடங்கும். முகமது கைஃப்பின் கூற்றுப்படி, ஷுப்மான் கில் ஒருநாள் போட்டியில் சிறந்த சாதனையைப் பெற்றுள்ளார், மேலும் அவர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்பதால், இடது கை தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அவர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
முகமது கைஃப் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல்.
Win Big, Make Your Cricket Tales Now