ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த தனுஷ் கோட்டியான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக மும்பையைச் சேர்ந்த துனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், கேகேஆர் அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Also Read
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் வலைபயிற்சி பந்துவீச்சாளராக மும்பையைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியான் இணைந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதுடன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
இதனையடுத்து இந்த சீசனுக்கு முன்னதாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற நிலையிலும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸின் மிடில் ஆர்டர் வீர்ரகள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள சற்று தடுமாறி வருவதன் காரணமாக, தனுஷ் கோட்டியானை அந்த அணி வலைபயிற்சி பந்துவீச்சாளராக அணியில் சேர்த்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் 5 போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியையும் தழுவி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகாளில் வெற்றிபெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now