
இந்திய அணி இளம் வீரர் சர்பராஸ்கான் கடந்த மூன்று ரஞ்சிக் கோப்பை சீசன்களில், தொடர்ந்து மிரட்டலாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். 2019-20 சீசன்களில் 928 ரன்களை குவித்த இவர், அடுத்த சீசனில் 982 ரன்களை சேர்த்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது துவங்கி நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை சீசனிலும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வெறும் 6 போட்டிகளிலேயே 556 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். டான் பிராட்மேனுக்கு அடுத்து, அதிக சராசரி வைத்துள்ள வீரராக இவர் திகழ்கிறார். ஆம், சர்பராஸ் மொத்தம் 37 முதல்தர போட்டிகளில் 80 சராசரியுடன் 3505 ரன்களை எடுத்திருக்கிறார்.
இருப்பினும், சர்பராஸ் கானுக்கு டெஸ்டில் இன்னமும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து சமீபத்தில் பேட்டிகொடுத்திருந்த சர்பராஸ் கான், இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிசிசிஐ மீது பலரும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார்கள்.