
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் இத்தொடருக்கான வங்கதேச அணி முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தன் டி20 அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், அணியின் துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த சைம் அயூப் மற்றும் ஃபகர் ஸ்மான் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மே 28ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனார். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக வங்கதேச அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபீசூர் ரஹ்மான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.