தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்று என் இதயம் கூறுகிறது - டேல் ஸ்டெயின்!
இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என்று இதயம் சொல்ல விரும்புகிறது. ஆனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து என்று நான் சாய்கிறேன் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார்.
இன்னும் சில தினங்களில் இந்தியாவில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது. இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ஆசிய அணிகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள், தொடரில் திடீரென திருப்புமுனையை உண்டாக்கக்கூடிய அணிகளாக இருக்கின்றன.
இந்த காரணத்தினால் யார் அரை இறுதிக்கு செல்வார்கள், கோப்பையை கைப்பற்றுவார்கள்? என்கின்ற கேள்வி குறித்து நிறைய சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகிறது. நிச்சயமாக தொடர் ஒருதலைப் பட்சமாக சாயாது என்று நம்புகிறார்கள்.
Trending
தற்பொழுது உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேல் ஸ்டெய்ன் எந்த இரு அணிகள் இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதிக் கொள்ளும் என்கின்ற தன்னுடைய கணிப்பை விரிவாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “இது கடினமான ஒன்று. தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்று என் இதயம் கூறுகிறது. அவர்கள் இறுதிப் போட்டிக்கு வருவதை நான் விரும்புகிறேன். அந்த அணியில் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து இந்தியாவில் விளையாடுகிறார்கள்.
அவர்களிடம் டேவிட் மில்லர் மற்றும் ஹென்றிச் கிளாசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்திய நிலமைகளை கண்டறிந்து அங்கு நல்ல முறையில் பேட்டிங் செய்த வீரர்கள் இருக்கிறார்கள். ரபாடா அங்கு பல ஆண்டுகளாக பந்து வீசி வருகிறார். மேலும் சில மூத்த கிரிக்கெட் வீரர்களும் அங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். எனவே இந்த திறன்களைப் பெற்று இருப்பதால் தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு செல்லும் திறனை பெற்றிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
ஃபேவரைட் என்று சொன்னால் இந்த உலகக் கோப்பையில் முதலில் இந்தியாதான். இந்தியா இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார்கள். இன்னொரு அணி இங்கிலாந்து என்று நான் நினைக்கிறேன். இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என்று இதயம் சொல்ல விரும்புகிறது. ஆனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து என்று நான் சாய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா சொந்த காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்கா திரும்பி இருக்கிறார். அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் பயிற்சி போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now