ஆசிய கோப்பை & உலகக்கோப்பையை வெல்வதே எனது எண்ணம் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து விராட் கோலி முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இருந்து முன்னணி வீரர் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டது தான் இந்திய கிரிக்கெட்டில் பேசுப்பொருளாக மாறியது.
ஃபார்ம் அவுட்டில் உள்ள விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் மோசமாக சொதப்பினார். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு தேவை எனக்கேட்டிருந்த கோலி, ஆசியக்கோப்பை தொடரில் நல்ல கம்பேக் தருவேன் என தேர்வுக்குழு அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதன்படி தான் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
Trending
இந்நிலையில் தனது ஃபார்ம் குறித்து பேசியுள்ள விராட் கோலி, “இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவுவதே தான் தற்போதைக்கு எனது எண்ணத்தில் உள்ளது. அதற்காக நான் என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன். நிச்சயம் அதனை செய்து முடிப்பேன்” என விராட் கோலி கூறியுள்ளார்.
விராட் கோலியின் ஓய்வுக்கு ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒருபுறம் பாராட்டி வந்த போதும், மற்றொரு புறம் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஒரு வீரர் ஃபார்ம் அவுட்டானால், தொடர்ச்சியாக விளையாடினால் மட்டுமே அவரால் கம்பேக் கொடுக்க முடியும். இன்னும் அவருக்கு எவ்வளவு ஓய்வு தான் கொடுப்பீர்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக தான் பிசிசிஐ திடீர் மாற்றத்தை கொண்டு வந்தது. ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் இளம் வீரர்களுடன் சேர்ந்து விராட் கோலியும் சென்று விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now