நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதற்கு பணம் ஒரு காரணம் அல்ல என்று இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த ஏலத்தில் சுமார் 81 வீரர்கள் அட்ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் மிக முக்கிய வீரராக இருந்துவந்த அவர் தற்சமயம் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. மேலும் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் இடையேயான பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்களும் உலா வந்தன. மேற்கொண்டு சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனியார் தொலைக்காட்சியின் பேட்டியின் போது, "இம்முறை ஐபிஎல் ஏலமானது முற்றிலும் வேறுவிதமானது. அதனால் அது எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் நான் நினைப்பது என்னவென்றால், டெல்லி நிச்சயமாக ரிஷப் பந்தை மீண்டும் தங்கள் அணியில் சேர்க்க விரும்புகிறது. சில சமயங்களில் வீரர் தக்கவைக்கப்பட வேண்டியிருக்கும் போது, எதிர்பார்க்கப்படும் கட்டணங்கள் பற்றி உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இருக்கும்.
ரிஷப் மற்றும் டெஸ்ட் அணிக்கு இடையே மிகத் தெளிவாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் டெல்லி நிச்சயமாக ரிஷப் பந்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது எனது உணர்வு, ஏனெனில் அவர்களுக்கும் ஒரு கேப்டன் தேவை. மேலும் தங்கள் உரிமையால் தக்கவைக்கப்பட்டவர்களில் சிலர் நம்பர் ஒன் தக்கவைப்புக் கட்டணம் என்ன என்பதைச் சொல்வதை விட அதிகமாகச் சென்றுள்ளனர். அதனால் டெல்லி அணியின் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் ரிஷப் பந்த் பெயர் இல்லாததற்கு பணம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருப்பினும் ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி ரிஷப் பந்தை மீண்டும் ஏலம் எடுக்கும்” என்று தெரிவித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியது. இந்நிலையில் தான் அந்த காணொளியின் கீழ் ரிஷப் பந்த் "டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல" என்று பதிவிட்டு தனது விளக்கத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அவர் தக்கவைக்க படாததற்கான காரணம் குறித்து அவர் எந்த காரணத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now