
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆஃப்கானிஸ்தான அணியை 172 ரன்களில் சுருட்டியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து எட்டியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.
இந்த நிலையில் நடப்பு தொடரில் தொடர்ந்து இரண்டு முறை அரைசதம் அடித்து ஷிவம் தூபே அசத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளிடம் பேசிய அவர், “என்னுடைய செயல்பாடு நினைத்து எங்கள் அணி கேப்டன் மகிழ்ச்சி கொண்டார்.நன்றாக விளையாடினாய் என்று என்னை பாராட்டினார். நானும் ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள். எங்களுக்கு எங்களுடைய ஆட்டம் குறித்து நன்றாகவே தெரியும். இந்திய அணியில் என்னுடைய பணி சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான்.
இதுதான் எங்களுடைய திட்டம். நாங்கள் இருவருமே அதிரடியாக விளையாடி போட்டியை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக இந்த ஓவர்களில் முடித்து விட வேண்டும் என்ற டார்கெட் வைத்துக் கொண்டு விளையாடவில்லை . 20 ஓவருக்கும் முன்பே போட்டியை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிரடியாக விளையாடினோம். கடந்த 14 மாதங்களாக கிரிக்கெட்டில் பல விஷயங்கள் குறித்து நான் உழைத்து வருகிறேன்.