
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறினர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எலிமினேட்டர் சுற்று ஆட்டமானது மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இதனால் இப்போட்டியிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மறுபக்கம் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ள குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நாட் ஸ்கைவர் பிரண்டு சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.